Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மதத் தலைவர்களுடன் போலீஸ் ஆலோசனை …!!

கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவுவதை தொடர்ந்து மத தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை ஈடுபட்ட இருக்கின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக கோவையில் ஒரு பதற்றமான சூழலில் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனை ஈடுபட்டு இருக்கின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வழக்கமான சோதனை சாவடிகளை விட அதிக சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடும் இந்த சூழ்நிலையில் இந்து மற்றும் முஸ்லிம் மத அமைப்பு நிர்வாகிகளை போலீசார் நேரில் சந்தித்து தற்பொழுது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினரின் நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டுகின்றனர். தனித்தனியாக மத அமைப்புணருடன்  கோவை காவலர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெறுகிறது.மேற்கு மண்டல ஐஜி சுதாகர்,  கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரனும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

Categories

Tech |