விருதுநகர் மாவட்டத்தில் பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பகுதியை அடுத்த மொட்டைமலை என்னும் பகுதியில் உள்ள சிறப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முத்தையா என்ற காவல்துறை அதிகாரி கடந்த 12ஆம் தேதி பணியில் இருக்கும்போதே மயங்கி விழுந்துள்ளார்.
பின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று திடீரென சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.