ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரமூர் கிராமத்தில் சுபாஷினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் முசிறி கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்தபிறகு சுபாஷினி தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த சுபாஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷினியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.