Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டாங்க… 6 நாள் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

காவல்துறையினருக்கு தெரியாமல் புதைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை 6 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் சுரேஷ் நின்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் தேதி வீட்டு கட்டுமான பணியில் சுரேஷ் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே அங்குள்ள மயானத்தில் சுரேஷின் உடலை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து புதைத்துவிட்டனர்.

இதுகுறித்து கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமார் ஆறு நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்ட சுரேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு டாக்டர் ஜெயந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்த பிறகே உடலானது மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் சுரேஷின் உடலை அடக்கம் செய்த குற்றத்திற்காக அவரது உறவினர்களான கரியமால், சக்திதாசன், ராஜாமணி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |