போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜசேகர் தா.பழூர் கடைவீதியில் பழகடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கும் அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் இடையில் இடச்பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்காததால் ராஜசேகர் தனது தாய் சத்தியாவோடு காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு ஏற்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவல் அதிகாரி நிக்கோலஸ் போன்றோர் அந்த கடைவீதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது ராஜசேகர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து ராஜசேகரை வீட்டுக்கு போகுமாறு சப்- இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். அதற்கு ராஜசேகர் சப்-இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீசனும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜசேகரை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்திள்ளார். ஆனால் அவரிடமும் ராஜசேகர் தகராறில் ஈடுபட்டதால் போலீஸ்காரர் நிக்கோலஸ் கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இவ்வாறு வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.