வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உடல்நலகுறையால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காமக்கூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் செல்வராஜ் வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி கோமதி வேலூர் காவல் பயிற்சி மையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் செல்வராஜ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து மருத்துவர்கள் செல்வராஜுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.