தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து ரூ2,68,30,954 வசூலிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இதை மீறி தேவையற்று வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2,68,30,954 அபராதம் வசூலிக்க பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.