Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட காவல்துறை சார்பில்… போலீஸ் கொடி அணிவகுப்பு… தொடங்கி வைத்தார் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…!!

மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் கொடி அணிவகுப்பை நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் மாவட்ட காவல் துறை சார்பில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இந்தக் கொடி அணிவகுப்பை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த கொடி அணிவகுப்பு தோகைமலை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து தோகைமலை காவல் நிலையத்தில் சென்று நிறைவடைந்துள்ளது. இதில் பாலவிடுதி, சிந்தாமணிபட்டி காவல்துறையினர், துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |