7 பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 1400 லிட்டர் சாராய ஊறலை வனதுறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் உள்ள பாலபட்டு வனச்சரகத்திற்ககு உட்பட்ட பகுதிகளில் சாராய ஊறல் பதுக்கி வைத்துள்ளதாக அம்மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனதுறை அதிகாரிகள் வெங்கோடு, பலாபூண்டி, வெள்ளரிகாடு போன்ற வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் பலாபூண்டி, வெள்ளரிக்காய் போன்ற பகுதிகளில் 1400 லிட்டர் சாராய ஊறல் 7 பேரல்களில் பதுக்கி வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் வனத்துறை அதிகாரிகள் அந்த சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்து விட்டனர்.