Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வளைகாப்பு நிகழ்ச்சி” போலீசாரின் சிறப்பான செயல்…. நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

கர்ப்பிணி போலீசாருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப் பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் அனுஜா என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது அனுஜா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் அனுஜாவிற்கு வளைகாப்பு நடத்தி சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி பூந்தமல்லி காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைத்து அனுஜாவுக்கு வளையல், சந்தனம், சீர்வரிசை பொருட்கள் மற்றும் மாலை அணிவித்து காவல்துறையினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சக பெண் காவல்துறையினர் சீமந்த பாடலை பாடி அனுஜாவை வாழ்த்தியுள்ளனர். இந்த விழாவில் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |