உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியை வெளிநாட்டவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.
உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய அறிவிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர் ஊரடங்கு உத்தரவுகளை மீறி ஜாலியாக சுற்றித் திரிந்துள்ளனர். வெளிநாட்டவர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கினர்.`நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை. ஆகையால் , மிகவும் வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள்” என்று 500 முறை எழுத வைத்துள்ளனர்.