உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வெறிச்சோடிய சாலைகளில் ஆடு, மாடு குதிரை போன்ற விலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. இந்நிலையில் தேவையான உணவு கிடைக்காமல் மஞ்சூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிந்துள்ளது.
இதனைப் பார்த்த மஞ்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் பிற காவல்துறையினர் உணவு கிடைக்காமல் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு தண்ணீர், உணவு, பழங்கள் போன்றவற்றை கொடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினரின் இந்த சிறப்பான செயலுக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.