சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் தேவையில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை பார்த்து காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டு வெளியே சுற்ற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.