சட்ட விரோதமாக மது பாட்டிகளை கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதி வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் காரியமங்கலம் கும்பலி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த கார் மற்றும் 6 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின் மது பாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக ஜவகர், இளங்கோ, ராஜன் என மொத்தம் 15 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1,637 மது பாட்டில்கள், கார் மற்றும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.