Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செயல்பட்டவர்கள்… 264 பேர் கைது… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 264 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மதுபானக் கூடங்கள், மது கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவற்றை தர்மபுரி மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்து வருவதை தடுத்து நிறுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து மலை கிராமங்கள் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வருதல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட 237 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் என மொத்தம் 264 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் மதுபாட்டில்களை கடத்தி வருவதற்காக பயன்படுத்தப்பட்ட 39 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 18 நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதைப்போல் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |