மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசடி பகுதியில் வசித்து வரும் முதியவர் ஜஹாங்கீர். இவருக்கு 56 வயது ஆகிறது.. ஜஹாங்கீர் அதே பகுதியிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது உறவினர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுடைய சிறுமியை அன்பாக அழைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..
இந்ந சூழலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. அங்கு அந்த பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்தசிறுமி நீண்ட நாள்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
அதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டிற்கு வந்த 56 வயது முதியவரான ஜஹாங்கீர் தன்னை அடிக்கடி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறினார்..
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.. புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஜஹாங்கீர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையிலடைத்தனர்.. 10 வயது சிறுமியை 56 வயதுடைய கிழவன் மாதக்கணக்கில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.