உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து 25 வயது பெண் ஒருவர் மீண்டு வந்துள்ளார்.. இந்நிலையில், அலிகார் தீன் தயாள் மருத்துவமனையின் அரசு மருத்துவர் துஃபைல் அகமது(30) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தபெண் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.. அந்த புகாரில் “செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவர் துஃபைல் மகளிர் வார்டுக்கு வந்தார்.. தன்னை பரிசோதனை செய்யும் சாக்கில் தன்னுடைய அங்கங்களைத் தொட்டார். பின் புதன்கிழமை காலையும் மருத்துவர் மீண்டும் வந்து என்னை பார்வையிட்டார்.. அப்போதும் அதேபோல மீண்டும் செய்தார்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து,சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆராய்ந்த பின்னர், மருத்துவர் பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை அணியாமல் தனிமை வார்டுக்கு சென்றார் என்று போலீசார் தெரிவித்தனர்.. பின்னர், குவார்சி போலீஸ் ஸ்டேஷனில் ஐபிசி 376 (2) டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாக சிவில் லைன்ஸ் காவல் நிலைய வட்ட அலுவலர் அனில் சமனியா தெரிவித்தார்.