இதையடுத்து மருத்துவக்குழுவினர் குன்னத்தூருக்கு விரைந்து சென்று, அங்குள்ள ரவியின் கிளினீக்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளித்து வருவது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரை மற்றும் ஊசிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர் நந்தினி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து, பின் அவரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.