தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியும், துரைச் சாமியாபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் சமூகவலைதளம் மூலம் 6 மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இருதயராஜ் என்பவர், உங்கள் இருவருக்கும் நான் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சிறுவர்களிடம் ஆசையாக பேசியுள்ளார்.
இதனையடுத்து, அந்தச் சிறுவன், தனது காதலியை (சிறுமியை) நேற்று முன்தினம் அழைந்துவந்து இருதயராஜிடம் ஒப்படைத்துள்ளார்.. இந்தநிலையில், இருதயராஜ் சிறுமியை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்து தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததைத் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து சிறுமி நடந்ததை போலீசாரிடம் கூறியதையடுத்து, கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையிலான போலீசார் இருதயராஜ்ஜையும் அந்தசிறுவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.