Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் ஒரு போலீஸ்”… பல பெண்களிடம் பாலியல் தொல்லை…. 6 திருமணம் செய்தவர் கைது..!!

சென்னையில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை புகாரின்படி போலீசார் கைது செய்தனர்.   

சென்னை எழும்பூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் கடந்த 30-ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் காவல் துறையினர் பல இடங்களில் தேடி இறுதியில் திருப்பூரில் பெண்ணை மீட்டனர். இந்நிலையில் பெண்ணை கடத்தியதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி  என்பவர் கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தகவலின் படி அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Image result for marriage

அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் போலி நிறுவனத்தை நடத்தி வந்ததும் அங்கு பணிபுரிந்த பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் தான் காவல்துறை அதிகாரி என்று கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.பின்னர் ராஜேஷ் அவலகத்திலிருந்து அவர் காவல்துறை  சீருடை போலியான ஆதார் அட்டை, கைவிலங்கு ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர். இதையடுத்து  அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |