Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான கணவரின் சுயரூபம்..!!

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சனை கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்..

கரூர் மாவட்டம் புலியூர் அருகே ஓடமுடியாம் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர்  ஜெகதாம்பாள்.. இவருக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்பழகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பெமினா பேகம் என்ற இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான்..

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து கடந்த ஜூன் 6ஆம் தேதியும் தகராறு ஏற்பட்டது.. இதன் காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில் தற்போது அன்பழகன் தன்னுடைய மனைவியிடம் 2 லட்ச ரூபாய் வரதட்சணையாக தந்தால் உன்னை (மனைவி) ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மனைவி பெமினா பேகம் கரூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சனை கேட்பதாக கணவர் மீது புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அன்பழகனின் தாயார் ஜெகதாம்பாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |