உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா. இவருக்கு வயது 25. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். சுக்லாவுக்கும், சகோதரர் 5 பேருக்கும் திருமணமாகவில்லை.. இந்தநிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை துண்டாக வெட்டி சுக்லா கொலை செய்துள்ளார்.. இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார் சுக்லாவை கைது செய்தனர்.
இது குறித்து எஸ்.எச்.ஓ, (SHO) கர்னல் கஞ்ச் ராஜ்நாத் சிங் கூறும்போது, “குற்றஞ்சாட்டப்பட்ட உதய் பிரகாஷ் சுக்லாகொல்லப்பட்ட பாபுராம் குடும்பத்தினருடன் எந்தவிதமான தகராறும், சண்டையும் போடவில்லை.. இந்த கொலையை செய்ய அவரைத் தூண்டியது என்ன என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்.. கூர்மையான முனையுடைய ஆயுதம் மீட்கப்பட்டு கோர்ட்டில் ஆதாரமாக வழங்கப்படும்”என்றார்.