Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில்… நான் விஜய் தேவரகொண்டா… பல பெண்களுடன் ஆபாச சேட்டிங்… போலீசாரின் பொறியில் சிக்கிய இளைஞன்!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, பல பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்த நபரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்  விஜய் தேவரகொண்டா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இவருக்கென்று தனியாக பெண்கள் ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. காரணம் இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இருந்துதான் இவர் பேமஸ் ஆகி விட்டார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்திருக்கும், அந்த படத்தில் இடம்பெற்றிருந்த Inkam Inkam Kavale Song மூலம் பிரபலமாகிவிட்டதால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து தரப்பு ரசிகர்களும் குவிந்து விட்டனர். இதில் பெண்களும் அடங்கும். பெண்களுக்கு பிடித்த ஹீரோவாக தற்போது இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இதை சாதகமாக பயன்படுத்த நினைத்த ஒருவன் சிக்கிவிட்டான். ஆம், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி பல பெண்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்தது மட்டுமில்லாமல், தவறான நோக்கத்துக்கு அழைத்துள்ளான். இந்த விபரம், நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு  தெரியவந்தது.

Image result for Man cheats girl saying he is actor Vijay Devarakonda, arrested.

இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் நடந்ததை கூறி புகாரளித்தார். அதை தொடர்ந்து போலீசார் ஸ்கெட்ச் போட்டு பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி போலீசார் ஏற்பாடு செய்த பெண் ஒருவர், அவனிடம்  பேஸ்புக்கில் சாதாரணமாக பேச்சுக்கொடுத்து ஐதராபாத்துக்கு வரும்படி அழைத்துள்ளார். வந்தால் சிக்கிவிடுவோம் என்று தெரியாத அவன் பெண்ணின் பேச்சை நம்பி வந்துள்ளான்.

அப்போது அங்கு மறைவான இடத்தில் ஒழிந்து நின்று நோட்டமிட்ட போலீசார் மற்றும் அவர்களுடன் இருந்த விஜய் தேவரகொண்டா தரப்பு ஆட்கள் அவனை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பொறியில் எலி சிக்கியது போல் மாட்டிக்கொண்ட அவனை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |