கும்மிடிப்பூண்டியில் 10 வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்த பின், அவனது போனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்..
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 26 வயதான கார்த்திக் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அதே பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியிடம் நன்றாக நெருங்கி பழக, நாளடைவில் இது காதலாக மாறியது.. இதையடுத்து அந்த மாணவியிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளான் கார்த்திக்.
அதைத்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி மயக்கி அந்த மாணவியை பலமுறை தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான்.. மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியும் வந்துள்ளான். இதனால் வேறு வழியின்றி வீடியோ வைத்து மிரட்டி வந்த இளைஞன் சொல்வதையெல்லாம் கேட்டு வந்துள்ளார் அந்த மாணவி.
அதுமட்டுமில்லாமல், அவன் தனது நண்பர்களுக்கும் அந்த மாணவியை அறிமுகம் செய்து, அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளான். இதனால் அந்த மாணவி மிகவும் மனமுடைந்து போய் வீட்டில் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது மாணவி நடந்த உண்மையெல்லாம் மறைக்காமல் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பதறிப்போன பெற்றோர் அந்த மாணவியுடன் சேர்ந்து கும்மிடிப்பூண்டி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை கொடுத்தனர்.. இதனால் இந்த விவகாரம் வெளியே வந்ததும், அதே பகுதியை சேர்ந்த 2 கல்லூரி மாணவிகளும் கார்த்திக் மீது அதே புகாரை கூற, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து புகாரின் பேரில் கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவனது போனையும் சோதனை செய்தனர். அதில், 10 வகுப்பு மாணவி மற்றும் 2 கல்லூரி மாணவிகள் தவிர, மேலும் சில இளம் பெண்களின் வீடியோ போனில் இருந்ததை பார்த்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அவனது நண்பர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.