Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்கிறேன்… சிறுமியை சீரழித்த இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

சிலைமான் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோவில்  போலீசார் கைது செய்துள்ளனர்..

மதுரை சிலைமான் அடுத்துள்ள சக்குடி மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்.. வயது  22 ஆகிறது.. சதீஷ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்..

இந்நிலையில் தான் சிறுமியின் காதல் விவகாரம் பற்றி வீட்டுக்குத் தெரிய வந்ததையடுத்து, அந்த சிறுமியின் தாய் சதீஷ் வீட்டிற்குச் சென்று, “எனது மகளிடம் பேசுவதை விட்டுவிடு.. இனிமேல் அவளை தொந்தரவு செய்யாதே” என்று எச்சரித்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்த சூழலில் கடந்த 23ஆம் தேதி இரவு நேரம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி காணாமல் போனார்.. இதையடுத்து, பெற்றோர் பதறிப்போய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. இந்நிலையில், சிறுமி கடந்த 25 ஆம் தேதி இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டார்.

அப்போது, அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, “மேலக் காரிசேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பைக்கில் அருகில் இருக்கும் கண்மாய்க்கு அழைத்துச் சென்று, கல்யாணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று கூறியுள்ளார்.. இதையடுத்து, சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |