Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய பெண் கைது!

ஒடிசாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஒடிசாவில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் ஒடிசாவின் பத்ராக் பகுதியில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது மல்கோடவுன் காவல் நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் பாகி கூறுகையில், “போலி செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டுள்ளவர்கள் தேச விரோதிகள்” என்று கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து புகார் அளிக்க மக்கள் அஞ்சினால் அது பரவி சமூகத்தை அழித்து சேதத்தை ஏற்படுத்தி விடும் என்றும் கூறினார்.

ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 88 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |