Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்… ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர்… ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்குட்பட்ட கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமத்தில் வசித்து வருபவன் இதயதுல்லா மகன் முகமது அப்ரீத்.. வயது  21 ஆகிறது..  இவன் அதே ஊரில் பணப்பரிமாற்றம் (money transfer) மற்றும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 12ஆம் தேதி முகமது அப்ரீத் கடையில் தன்னுடைய செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார்.. அப்போது அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பதிவு செய்து கொண்ட முகமது அப்ரீத், அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியது மட்டுமில்லாமல் அப்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்களையும் அனுப்பியிருக்கிறான்.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்துக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுத்தார்.. இதையடுத்து, பெரம்பூர் போலீசார் மானபங்கப்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகமது அப்ரீத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Categories

Tech |