பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னவதம் பச்சேரியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த குழந்தையின் தந்தையான ராஜா, குழந்தைகள் பாத்ரூம் செல்வதாகக் கூறி சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
பின்னர் இதுபற்றி சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறியதைதொடர்ந்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து புகாரின் பேரில் ராஜா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவிநாசி கிளைச் சிறையிலடைக்கப்பட்டார்.