வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பத்திரப்பல்லி, கம்பசமுத்திரம் காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.. அப்போது, வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டது.. இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மயில் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தார்.. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில் அந்த இளைஞர் மதினாப்பல்லியை சேர்ந்த 18 வயதுடைய விக்னேஷ் என்பது தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பெண் மயில், நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்துகள் கொண்ட பை மற்றும் டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..