Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி… “பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”… ஒருவன் சிக்கினான்..!!

சிறுமியை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைதுசெய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் சிறுமி ஒருவள் தண்ணீர் எடுப்பதற்கு குளத்துக்குச் சென்றிருக்கிறாள். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் இருவர் சிறுமியை குளத்தின் அருகேயுள்ள இடத்திற்கு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி மயங்கிய நிலைக்குச் சென்ற பின் இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.. பின்னர், நீண்ட நேரமானதால் சிறுமியைத் தேடி வந்த பெற்றோர், சிறுமியின் நிலையப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனிலும் புகாரளித்தனர்.. அதனைத்தொடர்ந்து சிறுமிக்கு நினைவு திரும்பிய நிலையில், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர்.

இதில், டெரிபார் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்பவனை போலீசார் கைதுசெய்த நிலையில், தலைமறைவாகிய மற்றோரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.. இதனிடையே, கைதுசெய்யப்பட்ட அர்ஜூன் மற்றும் அவனது நண்பன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீப நாட்களாக தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |