கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சதீஷ் குமார்.. இவனுக்கு வயது 21.. இவன் தனது வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் தருவதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது..
பின்னர் அந்த சிறுமியின் அழுகை சத்தம் கேட்கவே, சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.. அதனைத்தொடர்ந்து குழந்தையை மீட்ட பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. இதனிடையே சம்பவம் குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.