தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், அந்தபகுதியிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.. அதேபோல இவரது சொந்தக்காரரரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த 24 வயது மூர்த்தி என்பவர் மாணவியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி வந்துள்ளார்.
அப்போது மாணவியை கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, மூர்த்தி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.. இதனால் மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் மகள் காணாமல் போனதாக பெற்றோர் புகாரளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சூளகிரி பகுதிக்கு மாணவியை கடத்தி சென்ற இளைஞரை அதிரடியாக கைது செய்து, மாணவியை மீட்டனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியை கடத்தி சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தியை தருமபுரி கிளைச் சிறையிலடைத்தார்.. மேலும் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தருமபுரியில் இருக்கும் பெண்கள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.