திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பாரவேல் என்ற முதியவர் கடந்த ஒரு மாதமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாணவி தன்னுடைய தாயிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து தாய் உடனே கள்ளிமந்தையம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.. புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பூர்ணிமா, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த பாரவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..
இந்த விசாரணையில் அவர், தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.