மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை மற்றும் மகன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு வயது 45 ஆகிறது.. இவருக்கு 22 வயதில் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் என்ற மகன் இருக்கிறான்.. இந்நிலையில் அப்பாவும், மகனும் அப்பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை (32 வயது) பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பமாகி விட்டார். மேலும் உடல் நலம் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து தந்தை குமார் மற்றும் மகன் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.