வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமதுரை அருகேயுள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (37), நாகராஜன் (35), நாகராஜ் (30) மற்றும் பிலாத்தை சேர்ந்த பஷீர்அகமது (51), முருகேசன் (51) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.