ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அலங்காநல்லூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சமயநல்லூரை சேர்ந்த சப்பாணி(வயது 46), மேலசின்னம்பட்டி அர்ச்சுனன்(வயது 40), கல்லணை பிரசாத்(வயது 23), கொண்டையம்பட்டி சத்தியசீலன்(வயது 38) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, மேலும் அவர்கள் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர்.