இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.. இதனால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் பல பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தும், அவர்களை போலீசார் கைது செய்தும் வருகின்றனர்..
அந்தவகையில் சென்னை பல்லாவரம் அருகே இருக்கும் பொழிச்சலூர் பகுதியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனுஷ் என்பவரின் அலுவலகத்தில் வைத்து திருட்டுத் தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்துவருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பின் மதுபாட்டில்கள் விற்ற அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனுஷின் மகன் ஐயப்பன், மற்றும் இவரது கூட்டாளிகளான வசந்த், திவாகர், தங்கராஜ் ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும், 44 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல்செய்தனர்.