Categories
திருச்சி புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிறந்து 21 நாள்களே ஆன குழந்தை… “ரூ 1,15,000 க்கு விற்பனை “… 3 பேர் அதிரடியாக கைது..!!

மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000  ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் மேரி ஆகியோர் சேர்ந்து ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவருக்கு ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றனர்.

Image result for arrested

இச்சம்பவம் குறித்து குழந்தையை வாங்கிய முருகேசன், ராமாயி, தரகர் அந்தோணியம்மாள் மீது மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கீதா கொடுத்த புகாரில் மூன்று பேரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 370 (4), 317, 80, 81 (மைனர் குழந்தை கடத்தல், குழந்தையை அனாதையாக விட்டு விடுதல், குழந்தை பாதுகாப்பு சட்டம்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |