பின்னர் அங்கிருந்து சென்ற சந்தோஷ் அந்த வீடியோவை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் 36 வயதான கண்ணன் என்பவரிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த கண்ணனுக்கு சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .
பின்னர் நடந்தவற்றையெல்லாம் தனது பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்படி சந்தோஷ் மற்றும் கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.