Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு..!!

பாஜக இளைஞரணி நிர்வாகியை தாக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி.. இவர்  ஜூன் 22ஆம் தேதி, உமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகியான சங்கரபாண்டி என்பவரை தாக்க முற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.. அதனால் இரு தரப்பினரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 23ஆம் தேதி) புகாரளித்தனர்..

இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ மூர்த்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |