சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கு கடந்த 25ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இவரை 40 நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால், இவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருவில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனே சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்..
இந்த தகவலின் அடிப்படையில் சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டபோது, அந்த இளைஞர் நோயை பரப்பும் வகையில் வெளியே சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக சுகாதாரத் துறை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஆயிரம் விளக்கு போலீசார் உத்தரவை மீறிய அந்த வாலிபர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.