சாலையில் முகவசம் அணிந்து சென்ற சிறுவர்களுக்கு காவல்துறையினர் மாலை அணிவித்து பாராட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டீ கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதனை அடுத்து அத்தியாவசிய தேவை இன்றி முககவசம் அணியாமல் வெளியில் சுற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை சூப்பிரண்டு சாரதி உத்தரவின்படி அண்ணாசிலை பகுதியின் அருகில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவ்வழியில் முகவசம் அணிந்து வந்த சிறுவர்களுக்கு காவல்துறையினர் மாலை அணிவித்து கௌரவபடுத்தியுள்ளனர்.