Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதற்கு அழையுங்கள்… அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்… காவல்துறையின் தீவிர செயல்…!!

காவல்துறை சார்பாக 75 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளர் காலனி பகுதிகளில் காவல்துறை பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு காவல்துறை சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார். இதில் காவல்துறை டி.ஐ.ஜி மகேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

அதன்பின் கொரோனா தொற்று ஊரடங்கு நேரத்தில் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற பண்ணவாடி கிராமத்தில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கு காவல் துறை சார்பாக உணவு மற்றும் அரிசி பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள கைத்தொழில்களை தொடங்குவதற்கு முன்வந்தால் காவல்துறை மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும், அவர்களின் உயர்வுக்கு காவல்துறை உதவியாக இருக்கும் எனவும் டி.ஐ.ஜி மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான எதிராக நடைபெறும் பாலியல் அத்துமீறல் என பல வன்முறைகள் குறித்து காவல்துறை மூலம் விசாரணை நடத்தி உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இப்பணிகளை நடைமுறைப்படுத்த 17 காவல் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி புகார்களை 181 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |