பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்திலுள்ள கல் குவாரியில் 80 அடி பள்ளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சேலம் மாவட்டம் வைகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தோஷ் என்பவர் சடலமாக கிடந்தார்..
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் 80 அடி பள்ளத்திற்குள் தலையில் காயங்களுடன் அடிபட்டது குறித்து, கல் குவாரியில் மண் சரிந்து இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும், காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.