அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித்திரிந்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வருவதால் அதை தடுக்கும் விதமாக காவல்துறையினர் இ-பதிவு சான்றிதழ் இருக்கின்றதா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைகளின் போது விதிமுறைகளை மீறி நடந்துக்கொள்ளும் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதனை அடுத்து பொது இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 119 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியே பின்பற்றாமல் இருந்த 11 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிந்துள்ளனர். இந்நிலையில் சாலையில் விதிகளை மீறி செயல்பட்ட நபர்களை காவல்துறையினர் கண்டித்துள்ளனர். அப்போது அந்த நபர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக 32 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.