8 ஆயிரம் லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு பகுதியில் புகைமூட்டம் வெளியேறுவதை கவனித்த காவல்துறையினர் அந்த இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கே கும்பலாக மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தை கண்டுபிடுத்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து அங்கு வைக்கபட்டிருந்த 40 பேரல்களில் இருந்த 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் 500 கிலோ வெல்லம் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். அதன் பின் அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த அடுப்புகளையும் காவல்துறையினர் உடைத்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.