Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்பனை… பதுக்கி வைத்திருந்த 500 பாட்டில்கள் பறிமுதல்!

தேனியில் 144 தடையை மீறி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உட்பட ஒருசில கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நிறைய மதுபாட்டில்களை முன்னதாகவே வாங்கி பதுக்கி வைத்து தற்போது கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கும் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக கூடலூர் வடக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கூடலூர் வடக்கு தனிப் பிரிவு காவல்துறையினர் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கருநாக்கமுத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன், ரஞ்சித்குமார், மற்றும் வீரணன் ஆகிய 3 பேரும் வெவ்வேறு இடங்களில் மது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 524 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல்துறையினர், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |