Categories
மதுரை மாவட்ட செய்திகள்

9 மாத ஆண் குழந்தை சட்டவிரோத தத்தெடுப்பு… தம்பதியர்கள் மீது போலீசார் நடவடிக்கை..!!

மதுரையில் 9 மாத ஆண் குழந்தை சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டது தொடர்பாக 2 தம்பதியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை மாநகர் செல்லூர் போஸ் வீதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் – மேரி தம்பதியர். இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தகுழந்தையை அதே பகுதியில் உள்ள ஷாஜகான் – நாகூரம்மாள் தம்பதியருக்கு சட்ட விரோதமாக தத்து கொடுத்திருப்பதாக மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டிராஜன், குழந்தைகள் பாதுகாப்பு சமூகப்பணியாளர் அருண்குமார் மற்றும் செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைசாமி ஆகியோர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்..

இந்த விசாரணையில், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்த அடிப்படையில் சட்ட விரோதமாக குழந்தையை தத்து கொடுத்திருப்பது தெரியவர, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் அளித்த புகாரின்பேரில், போலீசார் அந்தக் குழந்தையை மீட்டு கருமாத்தூரில் உள்ள அரசு குழந்தை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரு தம்பதி மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |