காவல்துறையினர் சார்பாக முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு ராமசாமி நகர் பகுதியில் வசிக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா பிரபா தலைமை தாங்கியுள்ளார்.
இதனை அடுத்து முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் எரியோடு பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.