பணிச்சுமை அதிகமாக இருந்ததால் பெண் போலீஸ் கண்ணாடிப் பெட்டியில் கையால் ஓங்கி அடித்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் மணிமேகலை என்ற பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக மணிமேகலை பணி சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமேகலைக்கு மீண்டும் அதிகமான பணி வழங்கப்பட்டதால் கோபமடைந்த அவர் அங்கிருந்த கண்ணாடி பெட்டியில் கையால் ஓங்கி அடித்து விட்டார்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த மணிமேகலையை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிமேகலையின் கையில் 6 தையல் போடப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.